மற்ற தேவியர் எல்லாம் அமைதியான வடிவில் இருக்கும் போது காளி மற்றும் துர்க்கையின் அம்ச சிலைகள் மட்டும் அதிபயங்கரமான தோற்றத்தில் காட்சி தருகின்றன. இதற்கு காரணம் உண்டு. நமது மனம் ஒன்பது விதமான விருப்பங்களைக் கொண்டுள்ளது. இதை நவரசம் என்பர். நவரசங்களில் பயங்கர தோற்றமும் ஒன்றாகும். எனவேதான் சில சிற்பிகள் பயங்கர தோற்றங்களில் சிலைகளை வடிவமைத்தனர். காளி போன்ற தெய்வங்கள் துஷ்டர்களுக்கு எதிரானவை என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment